திருவாரூரில் “பர்ஹானா” திரைப்படம் ரத்து!

Filed under: சினிமா |

“பர்ஹானா” திரைப்படத்தின் காட்சிகள் திருவாரூரில் ரத்து செய்யப்படுவதாக திரையரங்கு உரிமையாளர்கள் அறிவித்துள்ளன.

நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் முக்கிய கேரக்டரில் நடித்திருக்கும் திரைப்படம் “பர்ஹானா.” இத்திரைப்படத்தை இயக்குனர் நெல்சன் வெங்கடேசன் இயக்கியுள்ளார். படம் இஸ்லாமியர்களை இழிவுபடுத்தும் விதமாக உள்ளதாக கண்டனங்கள் எழுந்தன. சமீபத்தில் படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பில் தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபு, “இந்த படம் இஸ்லாமியர்கள் பயப்படும் படியாக இல்லாமல், கொண்டாடும் விதமாக இருக்கும்” எனக் கூறியிருந்தார். “பர்ஹானா” திரைப்படம் இன்று வெளியாகியுள்ள நிலையில், திருவாரூரில் இப்பட காட்சிகள் ரத்து செய்யப்படுவதாக திரையரங்கு உரிமையாளர்கள் அறிவித்துள்ளன. படத்தை வெளியிட கடும் எதிர்ப்புகள் கிளம்பியுள்ளதால் பட காட்சிகள் ரத்து செய்யப்படுவதாக அறிவித்துள்ளனர். இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.