திருவாரூர் மாவட்டத்தில் முதலமைச்சர் சுற்றுப்பயணம்!

Filed under: அரசியல்,தமிழகம் |

திருவாரூர் மாவட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சுற்றுப்பயணம் செய்ய இருக்கும் நிலையில் அம்மாவட்டத்தில் வரும் 22ம் தேதி வரை டிரோன்கள் பறக்க தடை விதிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

நாளை திருவாரூர் மாவட்டத்திற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார்.இதையடுத்து இன்று முதல் வரும் 22ம் தேதி வரை திருவாரூர் மாவட்டத்தில் டிரோன்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. சென்னையிலிருந்து நாளை திருச்சி செல்லும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மன்னார்குடியில் நடைபெறும் திருமண நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்கிறார். அதையடுத்து அவர் திருவாரூர் மாவட்டம் காட்டூர் என்ற பகுதியில் கட்டப்பட்டு வரும் கலைஞர் அருங்காட்சியகம் மற்றும் மணிமண்டபம் அமைக்கும் பணிகள் குறித்து ஆய்வு செய்வார் என்று கூறப்படுகிறது. முதலமைச்சரின் வருகையை முன்னிட்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக திருவாரூரில் நாளை மற்றும் நாளை மறுநாள் டிரோன்கள் பறக்க தடை விதிக்கப்படுவதாக மாவட்ட காவல்துறை அறிவித்துள்ளது.