திரையரங்கில் ரூ.99 மட்டுமே கட்டணம்!

Filed under: சினிமா |

ரூபாய் 99 மட்டுமே சென்னையில் உள்ள முக்கிய திரையரங்கில் கட்டணமாக வசூலிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு ரசிகர்களை மகிழ்ச்சி ஏற்படுத்தியுள்ளது.

சென்னையிலுள்ள திரையரங்குகளில் 180 ரூபாய் முதல் 200 ரூபாய் வரை கட்டணம் வசூலிக்கப்படுகிறது. சென்னை வடபழனியிலுள்ள கமலா திரையரங்கில் 99 ரூபாய் மட்டுமே டிக்கெட் கட்டணம் வசூலிக்கப் போவதாக அறிவித்துள்ளது. ஆனால் இந்த கட்டணம் வாரத்தின் ஒரே ஒரு நாள் மட்டுமே. ஒவ்வொரு புதன்கிழமையும் 99 ரூபாய் மட்டுமே கட்டணம் வசூலிக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது. இதையடுத்து ஒவ்வொரு வாரமும் புதன்கிழமை கமலா திரையரங்கிற்கு அதிகளவில் பார்வையாளர்கள் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.