’தி கேரளா ஸ்டோரி’ தடையில்லை!

நாளை திரையரங்குகளில் வெளியாக இருக்கும் “தி கேரளா ஸ்டோரி” திரைப்படம் தமிழகத்தில் திரையிடப்பட்டால் சட்டம் ஒழுங்கு பாதிக்கும் என உளவுத்துறை எச்சரித்து இருந்தது. இதையடுத்து தமிழகத்தில் இத்திரைப்படம் திரையிடப்படுமா என்ற கேள்வி எழுந்தது.

“தி கேரளா ஸ்டோரி” திரைப்படம் நாளை வெளியாக இருக்கும் நிலையில் தியேட்டர்களுக்கு போலீசார் தீவிர பாதுகாப்பு அளிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. திரைப்படம் திரையிடப்பட்டால் சட்டம் ஒழுங்கு பாதிக்குமே என உளவுத்துறை எச்சரித்த நிலையில் போலீசார் தியேட்டர்களுக்கு கூடுதல் பாதுகாப்பு வழங்க இருப்பதாக வெளிவந்திருக்கும் தகவல் பெறும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அண்டை மாநிலமான கேரள முதலமைச்சர் பிரனாயி விஜயன் இத்திரைப்படத்தை எதிர்த்து குரல் கொடுத்த நிலையில் தமிழ்நாட்டில் இந்த படத்திற்கு எவ்வித எதிர்ப்பும் இல்லாமல் வெளியாகிறது.