தீபாவளிக்கு முந்துகிறது ஆரம்பம்

Filed under: சினிமா |

Aarambam-3-350x262அஜீத், நயன்தாரா, ஆர்யா, டாப்ஸி ஆகியோர் நடித்து விஷ்ணுவர்த்தன் டைரக்ட் செய்துள்ள படம் ஆரம்பம். இந்தப் படம் தீபாவளிக்கு ரிலீஸ் ஆவதாக அறிவிக்கப்பட்டிருந்தது.

இதோடு தீபாவளிக்கு விஷாலின் பாண்டியநாடு, கார்த்தியின் ஆல் இன் ஆல் அழகுராஜா, ஆகிய படங்களும் ரிலீசாவதாக அறிவிக்கப்பட்டது. ஆல் இன் ஆல் அழகுராஜாவின் தியேட்டர் புக்கிங் முடிந்து விட்டது.

இந்த நிலையில் அஜீத்தின் ஆரம்பம் தீபாளிக்கு இரண்டு நாட்கள் முன்னதாக அதாவது வருகிற 31ந் தேதி ரிலீசாவதாக அறிவித்திருக்கிறார்கள்.

“ரசிகர்களின் வேண்டுகோளுக்கு இணங்க” என்று வழக்கம்போல காரணம் சொன்னாலும், தீபாவளி சனிக்கிழமை வருவதால் வியாழன், வெள்ளி கலெக்ஷனை விட வேண்டாம் என்று கருதியே முன்னதாகவே படத்தை ரிலீஸ் செய்கிறார்கள்.

தீபாவளிக்கு ரிலீஸ் செய்தால் ஆரம்பம் படத்திற்கு டிக்கெட் கிடைக்காதவர்கள் மற்ற படத்திற்கு செல்ல வாய்ப்பு இருப்பதும் இதற்கு இன்னொரு முக்கிய காரணம்.