“துருவ நட்சத்திரம்” படம் பற்றிய அப்டேட்!

Filed under: சினிமா |

நடிகர் விக்ரம் நடிப்பில் கடந்த 6 வருடங்களாக இழுத்துக் கொண்டிருந்த “துருவ நட்சத்திரம்” ரிலீஸ் வேலைகள் ஜரூராக நடைபெற்று வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

2017ம் ஆண்டு விக்ரம் நடிப்பில் தொடங்கப்பட்ட “துருவ நட்சத்திரம்” திரைப்படம் பல ஆண்டுகளாக கிடப்பிலேயே கிடக்கிறது. படத்தின் இன்னும் சில காட்சிகள் மட்டும் படமாக்கப்பட வேண்டியுள்ளது. பல ஆண்டுகளாக இழுத்தடித்துக் கொண்டிருக்கும் “துருவ நட்சத்திரம்” திரைப்படத்தில் நடிப்பார் என சொல்லப்பட்டது. இதுவரை எடுக்கப்பட்ட காட்சிகளைப் பார்த்த விக்ரம் மீண்டும் தேதிகள் தந்து நடித்துக் கொடுத்துள்ளதாக கூறப்பட்டது. இப்போது ஹாரிஸ் ஜெயராஜ் படத்துக்கான பின்னணி இசைக் கோர்ப்புப் பணிகளை மேற்கொண்டுள்ளார். இதையடுத்து பணிகளை முடித்து மே மாதத்தில் ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. இப்போது படத்தின் மீதமிருந்த காட்சிகள் அனைத்தையும் கௌதம் மேனன் படமாக்கி முடித்துள்ளதாக சொல்லப்படுகிறது. இதையடுத்து படத்தை மே மாதம் 19ம் தேதி ரிலீஸ் செய்ய வேலைகள் நடந்து வருவதாக சினிமா வட்டாரங்கள் கூறுகின்றன.