தூத்துக்குடியில் ரூ.328 கோடி செலவில் புதிய திட்டங்களுக்கு முதல்வர் பழனிசாமி அடிக்கல் நாட்டினார்

Filed under: Uncategory,அரசியல்,தமிழகம் |

தூத்துக்குடி மாவட்டத்தில் ரூபாய் 328 கோடி மதிப்பிலான புதிய திட்ட பணிகளுக்கு முதல்வர் பழனிசாமி அவர்கள் இன்று அடிக்கல் நாட்டி வைத்தார்.

தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடந்த இந்நிகழ்ச்சியில் 22 கோடியே 38 லட்சம் மதிப்பில் செயல்படுத்தி முடிக்கப்பட்ட 16 பணிகளை துவக்கி வைத்த முதல்வர் பழனிசாமி, 37 கோடியே 55 லட்சம் ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளையும் வழங்கினார்.

ரவுடிகளால் வெடி குண்டு வைத்து கொல்லப்பட்ட காவலர் சுப்பிரமணியத்தின் மனைவி புவனேஸ்வரிக்கு அரசு பள்ளி வேலைவாய்ப்பு ஆணையையும், 50 லட்ச ரூபாய் காசோலையையும் முதலமைச்சர் பழனிசாமி வழங்கினார்.

அதற்கு முன்னதாக, தூத்துக்குடி அரசு மருத்துவமனை புற்றுநோய் சிகிச்சை பிரிவிற்கு ரூபாய் 16-கோடி மதிப்புள்ள புற்றுநோய்களுக்கு சிகிச்சை அளிக்க பயன்படும் லீனியர் ஆக்சிலெரட்டேர் கருவியை முதல்வர் தொடங்கி வைத்தார்.