தெருத்தெருவாக போஸ்டர் ஒட்டும் இயக்குனர்!

Filed under: சினிமா |

செல்வராகவன் நடிப்பில், இயக்குனர் மோகன் ஜி இயக்கத்தில் உருவான ‘பகாசூரன்’ திரைப்படம் சமீபத்தில் வெளியாகிய நல்ல வரவேற்பு பெற்றது.

ஒரு சிலர் இத்திரைப்படத்திற்கு நெகட்டிவ் விமர்சனங்கள் கொடுத்தாலும் இத்திரைப்படத்தின் வசூல் திருப்திகரமாக இருப்பதாக கூறப்படுகிறது. இந்நிலையில் படத்தின் வெற்றிக்காக இயக்குனர் மோகன் ஜி தெருத்தெருவாக போஸ்டர் ஒட்டி உள்ளார். இதுகுறித்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. தனது படம் மக்கள் மத்தியில் கவனம் பெற வேண்டும் என்பதற்காக மோகன் ஜெயின் இச்செயல் ரசிகர்கள் மத்தியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கனவே இயக்குனர் மிஷ்கின் இயக்கிய “ஓநாயும் ஆட்டுக்குட்டியும்” படத்தின் போஸ்டரை ஒட்டி பரபரப்பு ஏற்படுத்தினார். படம் குறித்து பிரபல பாலிவுட் இயக்குனர் அனுராக் காஷ்யப் தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். ‘பகாசூரன்’ திரைப்படம் தென்னிந்திய அளவில் நல்ல வரவேற்பை பெற்று வருவதை கேட்க முடிகிறது, என்னுடைய நண்பர் நட்டி நட்ராஜ் மற்றும் இயக்குனர் செல்வராகவன் ஆகியோர்களுக்கு எனது வாழ்த்துக்கள் என தனது டுவிட்டரில் கூறியிருந்தார்.