தெலுங்கானா முதல்வர் பேச்சு!

Filed under: அரசியல்,இந்தியா |

தெலுங்கானா முதலமைச்சர் ரேவந்த் ரெட்டி, பிரதமர் மோடிக்கு தற்போது 74 வயதாகிறது, பாஜகவில் பொதுவாக 75 வயதில் ஓய்வு பெற்று விடுவார்கள் என்பதால் பிரதமர் மோடி பிரதமர் ஆனாலும் அவர் ஒரு ஆண்டு மட்டுமே பிரதமராக இருப்பார்” என்றும் பேசி உள்ளார்.

இன்று தேர்தல் பிரச்சார மேடையில் தெலுங்கானா முதலமைச்சர் ரேவந்த் ரெட்டி பேசிய போது “75 வயதாகிய எல்கே அத்வானி, முரளி மனோகர் ஜோஷி ஆகியோர் அரசியலில் இருந்து ஓய்வு பெற்று விட்டார்கள். மோடிக்கும் தற்போது 74 வயதாகும் நிலையில் அவர் வெற்றி பெற்று பிரதமர் ஆனாலும் ஒரு ஆண்டு மட்டுமே பிரதமராக இருப்பார். பாஜகவை பொறுத்தவரை 75 வயது ஆகிவிட்டால் ஓய்வு பெற வேண்டும் என்பதுதான் கொள்கை, அப்படித்தான் இதற்கு முன் இருந்த தலைவர்கள் ஓய்வு பெற்றிருக்கிறார்கள். ஆனால் 75 வயது ஆன பிறகு பிரதமர் மோடி ஓய்வு பெற தயாரா? ஒட்டுமொத்த நாட்டையும் மோடி பாழாக்கிவிட்டார். நாடு மிகப்பெரிய அழிவை சந்தித்துள்ளது. இதற்கு அவர் தான் பொறுப்பேற்க வேண்டும்” என்று அவர் கூறியுள்ளார்.