தேசிய விருதுகள் நாளை அறிவிப்பு!

Filed under: இந்தியா,உலகம் |

நாளை தேசிய விருதுகள் பற்றிய அறிவிப்பு வெளியாக உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

தமிழ் திரைப்படமான “சூரரைப்போற்று”, “ஜெய்பீம்“ போன்ற திரைப்படங்களுக்கு விருதுகள் கிடைக்குமா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது. ஒவ்வொரு ஆண்டும் சிறந்த திரைப்படங்களுக்கான தேசிய விருதுகள் அறிவிக்கப்பட்டு வருகிறது. அதில் தமிழ் திரைப்படங்கள் அதிக விருதுகளை வென்று வருகின்றன. இந்நிலையில் கடந்த ஆண்டு வெளியான “சூரரைப்போற்று”, “ஜெய்பீம்“ ஆகிய படங்களுக்கு நாளை அறிவிக்கப்படும் தேசிய விருதில் விருது கிடைக்க அதிக வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது. 48வது தேசிய விருதுகள் அறிவிப்பு நாளை மாலை 4 மணிக்கு அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட உள்ளது. இது தமிழ் திரைப்பட உலகில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.