தேர்தல் பிரச்சாரத்தை ரத்து செய்த அமித்ஷா!

Filed under: அரசியல்,இந்தியா |

வரும் 10ம் தேதி கர்நாடக மாநிலத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதனால் அங்கு தீவிரமாக தேர்தல் பிரச்சாரம் செய்து கொண்டுள்ளனர்.

காங்கிரஸ் மற்றும் பாஜக கட்சி தலைவர்கள் கர்நாடக மாநிலத்தில் விறுவிறுப்பான தேர்தல் பிரச்சாரத்தை செய்து வருகின்றனர். கடந்த இரண்டு நாட்களாக மணிப்பூரில் கலவரம் உச்ச கட்டத்தில் இருக்கும் நிலையில் கர்நாடக மாநிலத்தில் தேர்தல் பிரச்சாரம் செய்து வந்த அமித்ஷா உடனடியாக பிரச்சாரத்தை ரத்து செய்துவிட்டு டில்லி சென்றுள்ளார். அவர் மணிப்பூர் மாநில முதலமைச்சர் மற்றும் உயரதிகாரிகளுடன் முக்கிய ஆலோசனை செய்து வருவதாகவும் காணொளி வழியாக நடைபெற்ற இந்த ஆலோசனையில் மாநிலத்தில் இயல்புநிலை திரும்ப எடுக்க வேண்டிய நடவடிக்கை குறித்து அறிவுறுத்தியதாகவும் கூறப்படுகிறது. பாதுகாப்பு படையினரின் கடும் முயற்சி காரணமாக தற்போது மணிப்பூர் மாநிலத்தில் கலவரம் கட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.