தொடங்கியது “பையா 2” வேலைகள்!

Filed under: சினிமா |

கடந்த 2011ம் ஆண்டு லிங்குசாமி இயக்கத்தில் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்ற திரைப்படம் “பையா.” கார்த்தியின் சினிமா கேரியரில் இன்றளவும் மிகப்பெரிய ஹிட்டாக அமைந்தது இத்திரைப்படம். இப்போது அந்த படத்தின் இரண்டாம் பாகம் உருவாக உள்ளதாக கடந்த சில மாதங்களுக்கு முன் அறிவிக்கப்பட்டது. படத்தில் ஹீரோவாக கார்த்திக்கு பதில் ஆர்யா நடிப்பார் என சொல்லப்பட்டது.

பின் கார்த்தியே அதன் இரண்டாம் பாகத்தில் நடிப்பார் என்று கூறப்பட்டது. லிங்குசாமி நடிகர் கார்த்தியை சந்தித்து “பையா 2” கதையை விவரித்ததாகவும், அந்த கதை கார்த்திக்கு மிகவும் பிடித்திருந்ததாகவும் சொல்லப்பட்டது. ஆனால் இப்போது கார்த்தி, ஆர்யா இருவருமே அந்த படத்தில் நடிக்கவில்லை என்றும், அவர்களுக்கு பதிலாக நடிகர் அதர்வாவின் தம்பி ஆகாஷ் நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதையடுத்து இப்போது “பையா 2” திரைப்படத்துக்கான திரைக்கதைக்கான வேலைகளை லிங்குசாமி தனது குழுவினரோடு தொடங்கியுள்ளாராம்.