தோனியை “கேப்டன்” என்று சொன்ன கம்பீர்!

Filed under: விளையாட்டு |

இந்திய அணியின் முன்னாள் வீரர் கவுதம் கம்பீர் லக்னோ அணியின் ஆலோசகராக நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்திய அணியின் முன்னாள் வீரரான கவுதம் கம்பீர் இப்போது பாஜக எம்பியாக இருக்கிறார். ஆனாலும் தொடர்ந்து இந்திய அணி பற்றியும் கிரிக்கெட் பற்றியும் விமர்சனங்களை வைத்து வருகிறார். இந்நிலையில் அடுத்த ஆண்டு ஐபிஎல் தொடரில் புதிதாகக் களமிறங்கும் லக்னோ அணியின் ஆலோசகராக நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில் நேற்று சிஎஸ்கே மற்றும் லக்னோ அணிகளுக்கு இடையிலான போட்டி நடந்து முடிந்ததும் தோனியும், கம்பீரும் சந்தித்து பேசினர். அந்த புகைப்படங்களைப் பகிர்ந்துள்ள கம்பீர் ‘கேப்டனோடு ஒரு சந்திப்பு’ எனக் கேப்ஷன் கொடுத்துள்ளார். கிரிக்கெட் விளையாடிய காலத்தில் கம்பீர் தோனியைக் கடுமையாக விமர்சனம் செய்த வீரர் என்பது குறிப்பிடத்தக்கது.