தோனி மற்றும் சாக்ஷி தம்பதியருக்கு 15வது திருமண நாள்!

Filed under: இந்தியா,விளையாட்டு |

 

கிரிக்கெட் வீரர் தோனி இந்திய கிரிக்கெட் கண்டெடுத்த உலகத்தரமான கிரிக்கெட்டர். சச்சினுக்குப் பிறகு ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகின்ற கிரிக்கெட்டராக தோனிதான் இருந்து வருகிறார். 2004ம் ஆண்டு சர்வதேசக் கிரிக்கெட்டில் அறிமுகமான தோனி 2007ம் ஆண்டு இந்திய அணிக்குக் கேப்டனாகி டி 20 உலகக் கோப்பையை தன் தலைமையில் பெற்றுத் தந்தார்.

பின்னர் 2011ம் ஆண்டு 50 ஓவர் உலகக் கோப்பை மற்றும் 2013ம் ஆண்டு சாம்பியன்ஸ்கோப்பை தொடர் ஆகியவற்றையும் அவர் தலைமையில் இந்தியா வென்றது. தோனி தன்னுடைய பள்ளித் தோழியான சாக்‌ஷியை 2009ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். அவர்களுக்கு ஸீவா என்ற பெண் குழந்தை இருக்கிறது. தோனி- சாக்‌ஷி தம்பதியர் தங்கள் 15வது திருமண நாளை இன்று கேக் வெட்டிக் கொண்டாடியுள்ளனர். இது சம்மந்தமான புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி உள்ளது.