நடமாடும் மருத்துவமனை தொடங்கி வைத்தார் முதலமைச்சர்!

Filed under: தமிழகம் |

முதலமைச்சர் தமிழகம் முழுதும் 256 நடமாடும் மருத்துவமனைகளை தொடங்கி வைத்தார்.

இன்று முதலமைச்சர் மு.க-.ஸ்டாலின் இல்லம் தேடி மருத்துவ சிகிச்சை என்ற திட்டத்தின் கீழ் 256 நடமாடும் மருத்துவமனை வாகனங்களை தொடங்கி வைத்தார். தொலைதூர கிராமங்களுக்கான மருத்துவத்தை வலுப்படுத்த நடமாடும் மருத்துவமனைகள் தொடங்கப்படும் என ஏற்கனவே அறிவித்திருந்த நிலையில் கடந்த ஏப்ரல் மாதம் 133 மருத்துவ வாகனங்கள் சேவை தொடங்கப்பட்டது.
இந்நிலையில் அடுத்த கட்டமாக இன்று 256 நடமாடும் மருத்துவமனை வாகனங்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கொடியசைத்து தொடங்கி வைத்தார். இந்த மருத்துவமனையில் ஒரு மருத்துவர், செவிலியர், ஒரு சுகாதார உதவியாளர் ஆகியோர் மருத்துவ வசதி இல்லாத கிராமங்களுக்கு சென்று சேவையாற்றுவார்கள்.