நடிகர் திலகம் சிவாஜியின் 93வது பிறந்தநாள்: டூடுல் வெளியிட்டு மரியாதை

Filed under: சினிமா |

சென்னை, அக் 1:
நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் 93 ஆவது பிறந்தநாளை முன்னிட்டு அவருக்கு பெருமை சேர்க்கும் விதத்தில் கூகுள் நிறுவனம் doodle வெளியிட்டுள்ளது.

நடிகர் திலகம் சிவாஜி கணேசன், 1952ம் ஆண்டு பராசக்தி என்ற திரைப்படத்தின் மூலம் தனது திரையுலக வாழ்க்கையைத் தொடங்கிய சிவாஜி கணேசன், இந்திய மொழித் திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.

கடந்த 1999ம் ஆண்டு பூப்பறிக்க வருகிறோம் என்ற திரைப்படம்தான் அவரது கடைசி திரைப்படமாகும். நடிகர் திலகம் என அழைக்கப்படும் சிவாஜி கணேசன்,
கமல்ஹாசன், ரஜினிகாந்த் உள்பட பல முன்னணி நடிகர்களுடன் நடித்துள்ளார்.

சிவாஜி கணேசனுக்கு இந்திய அரசின் உயரிய விருதான பத்மஸ்ரீ, பத்மபூஷன் ஆகிய விருதுகள் வழங்கி கவுரவிக்கப்பட்டுள்ளன.

இவர், கடந்த 2001ம் ஆண்டு ஜூலை 21ம் தேதி, காலமானார்.

இந்நிலையில் நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் 93 ஆவது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது. இதை முன்னிட்டு அவருக்கு பெருமை சேர்க்கும் விதத்தில்
கூகுள் நிறுவனம் doodle வெளியிட்டுள்ளது.