நடிகை பார்வதி வீட்டில் கொள்ளை!

Filed under: சினிமா |

கடந்த சில நாட்களுக்கு முன்னர் நடிகை பார்வதி வீட்டில் கொள்ளை சம்பவம் நிகழ்ந்துள்ளது. அந்த கொள்ளையன் தற்போது கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

நடிகை பார்வதி வீட்டில் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டவர் அவரிடம் முன்னாள் பணியாளராக இருந்த சுபாஷ் என்பது தற்போது தெரியவந்துள்ளது. கொள்ளையன் சுபாஷ் புதுக்கோட்டையில் வைத்து கைது செய்யப்பட்டதாகவும் அவரிடம் போலீசார் விசாரணை செய்து வருவதாகவும் கூறப்படுகிறது. முதல்கட்ட விசாரணையில் பெண் குரலில் சுபாஷ் பேசியதாகவும், அவர் பெண் குரலில் பேசியது எப்படி என நடித்து காட்டியதாகவும் அது ஒரு வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது.