நடிப்புக்கு பிரேக் விடும் பிரபல நடிகை?

Filed under: சினிமா |

பேமிலி மேன் இயக்குனர்கள் ராஜ் & டிகே இயக்கத்தில் சிட்டாடல் என்ற வெப் தொடரில் நடிகை சமந்தா நடித்து வருகிறார். இது ஏற்கனவே பிரியங்கா சோப்ரா நடிப்பில் வெளியான “சிட்டாடல்” தொடரின் ரீமேக் என சொல்லப்பட்டது. ஆனால் அதனை சமந்தா மறுத்து தான் நடிக்கும் தொடர் ரீமேக் இல்லை என்று தன்னுடைய சமூகவலைதளப் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

“சிட்டாடல்” வெப் தொடரில் தான் சம்மந்தப்பட்ட காட்சிகளில் சமந்தா நடித்து முடித்துவிட்டதாக சொல்லப்படுகிறது. இதையடுத்து அவர் கைவசம் இருக்கும் ஒரே படமான “குஷி” திரைப்படமும் இறுதிக் கட்டத்தை நெருங்கிவிட்டது. இந்த படத்தையும் முடித்துவிட்டு அவர் சினிமாவில் நடிப்பதில் இருந்து சுமார் ஒரு வருடம் இடைவெளி எடுத்துக் கொள்ள போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. சமீபத்தில் உடல்நலம் பாதிக்கப்பட்ட சமந்தா இப்போதுதான் குணமாகி படங்களில் நடித்துவந்தார். மீண்டும் அவர் ஓய்வெடுப்பதற்கான காரணம் என்னவென்று தெரியவில்லை.