நயன்தாராவுக்காக தாடியை துறந்தார், விஜய்சேதுபதி!

Filed under: சினிமா |

Vijay Sethupathiநீண்ட நெடுங்காலமாகவே பாதி முகத்தை மூடிய தாடி மீசையுடன் படங்களில் நடித்துவந்த விஜய்சேதுபதி, இப்போது தாடி மீசையை முற்றிலுமாக மழித்து பளபளவென்று காட்சி தருகிறார். ஏன் எதற்காக? நயன்தாராவுடன் ‘நானும் ரவுடிதான்’ என்ற படத்தில் நடித்துக்கொண்டிருக்கிறார். நயனுக்கு ஜோடியாக நடிக்கும்போது தாடி மீசையுடனிருந்தால் எடுபடாது.
நயன்தாராவும் விரும்பாததன் காரணமாக தாடி மீசைக்கு டாட்டா காட்டிவிட்டார். பாண்டிச்சேரியில் படப்பிடிப்பை பார்க்க வந்தவர்களுக்கு விஜய் சேதுபதியை அடையாளம் தெரியவில்லை. இதுதான் கொடுமை.