நர்சிங் மாணவி தற்கொலை!

Filed under: இந்தியா |

நர்சிங் மாணவி ஒருவர் தனக்கு தூக்கம் வராததால் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் ஒடிசாவில் நடந்துள்ளது.

ஒடிசா மாநிலத்தில் புவனேஸ்வர் பகுதியில் நர்சிங் படித்து கொண்டிருந்த மாணவி ஒருவருக்கு தூக்கம் வராதது பெரும் பிரச்சனையாக இருந்துள்ளது. இதையடுத்து அவர் கடிதம் எழுதி வைத்துவிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இதுபற்றி தகவல் அறிந்ததும் காவல்துறையினர் நர்சிங் மாணவியின் பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து காவல்துறையினர் விசாரணை செய்து வருகின்றனர். மேலும் மாணவி எழுதிய கடிதத்தையும் ஆய்வு செய்து வருகின்றனர்.