நள்ளிரவில் விபச்சாரத்தில் 25 இளம்பெண்கள் கைது

Filed under: இந்தியா |

பெங்களூருவில் மதுபான விடுதிகளில் விபச்சாரம் நடப்பதாக போலீசாருக்கு தகவலறிந்த நிலையில், அங்கு சென்று விசாரணை நடத்தியதில் 25 இளம்பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கர்நாடக மாநிலம் பெங்களூரு எம்.ஜி.ரோட்டில் பல மதுபான விடுதிகள் உள்ளன. இங்குள்ள மதுபான விடுதிகளில் விபச்சாரம் போதைப் பொருட்களுடன் போதை விருந்து நடைபெறுவதாக கப்பன் பூங்கா போலீசாருக்கு தகவல் கிடைத்தது. 60 பேர் கொண்ட போலீசார் 3 குழுக்களாகப் பிரிந்து சம்பவ இடத்திற்குச் சென்று, மதுபான விடுதிக்குள் நுழைந்தனர். உள்ளே, ஆப்பிரிக்க நாட்டைச் சேர்ந்தவர்கள் அதிகமாக இருந்தனர். அவர்கள் போலீசாரை பார்த்து தப்பியோட முயன்றனர். அவர்களில் 55 பேரை கைது செய்தனர். இதில், 25 பேர் இளம்பெண்கள். கைதானவர்களை மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டனர். அதில், அவர்கள் போதைப்பொருள் உட்கொண்டது உறுதி செய்யப்படது. அதன்பின்னர், அவர்களின் 55 பேர் பாஸ்போர்ட் மற்றும் விசா ஆகியவற்றை பறிமுதல் செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.