நாங்குநேரி விவகாரம் குறித்து வைரமுத்து!

Filed under: தமிழகம் |

கவிஞர் வைரமுத்து தனது சமூக வலைதள பக்கத்தில் “ஜாதியை கூட மன்னித்து விடலாம் ஆனால் அதற்கு இழிவு பெருமை கற்பித்தவனை மன்னிக்க முடியாது” என பதிவிட்டுள்ளார்.

நாங்குநேரியில் சமீபத்தில் பட்டியலின மாணவர் ஒருவர் சக மாணவர்களால் தாக்கப்பட்ட சம்பவம் தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. நாங்குநேரி சம்பவம் குறித்து கவிஞர் வைரமுத்து தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது:
நாங்குநேரி சம்பவம்
நாட்டின் இதயத்தில் விழுந்த வெட்டு

சாதியைக்கூட மன்னிக்கலாம்
அதற்கு
இழிவு பெருமை கற்பித்தவனை
மன்னிக்க முடியாது

சமூக நலம் பேணும்
சமூகத் தலைவர்களே!

முன்னவர் பட்ட பாடுகளைப்
பின்னவர்க்குச்
சொல்லிக் கொடுங்கள்
அல்லது
மதம் மாறுவதுபோல்
சாதி மாறும் உரிமையைச்
சட்டமாக்குங்கள் & என்று பதிவிட்டுள்ளார்.