நாஞ்சில் சம்பத்தின் கருத்து!

Filed under: அரசியல்,தமிழகம் |

நாஞ்சில் சம்பத் ஈரோடு இடைத்தேர்தலில் எதிர்க்கட்சித் தலைவரும் அதிமுக இடைக்கால பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமியின் தோல்வி காரணமாக, அவரது எதிர்க் கட்சித் தலைவர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்று கூறியுள்ளார்.

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் அதிமுக பல்வேறு பிரச்சனைகளுக்கு மத்தியில் போட்டியிட்டது. அக்கட்சிக்கு இரட்டை இலை சின்னம் கிடைக்குமா என்ற சந்தேகம் இருந்தது. தேர்தல் ஆணையத்தில் போராடி அந்த சின்னத்தை பெற்றது. மேலும் ஓபிஎஸ் அணியை புறந்தள்ளிய எடப்பாடி பழனிச்சாமி அணி ஓபிஎஸ் மற்றும் பாஜக துணை இல்லாமலே வெற்றி பெறுவோம் என்றும் அதன் கட்சி தலைவர்கள் சிலர் கூறி வந்தனர். இந்நிலையில் ஈரோடு இடைத்தேர்தலில் எடப்பாடி பழனிச்சாமி சூறாவளி பிரச்சாரம் செய்தபோதிலும் மிகவும் கஷ்டப்பட்டு தான் டெபாசிட் தொகையை அதிமுக வேட்பாளர் பெற்றுள்ளார். இந்நிலையில் இந்த தோல்வி குறித்து கருத்து கூறிய நாஞ்சில் சம்பத் எடப்பாடி பழனிச்சாமி எதிர்க்கட்சி தலைவர் பதவியையும் அதிமுக இடைக்கால பொதுச் செயலாளர் பதவியும் ராஜினாமா செய்ய வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.