நாமக்கல்லில் பக்தர்கள் மகிழ்ச்சி!

Filed under: தமிழகம் |

நாமக்கல்லில் உள்ள ஆஞ்சநேயர் கோவில் மிகவும் புகழ்பெற்றது. இக்கோவிலில் சுவாமியை தரிசனம் செய்வதற்கு இனிமேல் கட்டணம் கிடையாது என்று அறிவித்துள்ளதால் மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

நாமக்கல்லில் அமைந்துள்ள ஆஞ்சநேயர் கோவில் மேற்கூரை அற்றது. இக்கோவிலில் உள்ள ஆஞ்சநேயரை வழிபட மாநிலம் முழுவதுமிலிருந்து மக்கள் வருகின்றனர். தமிழகத்திலேயே 18 அடி உயரமுள்ள ஒரே கல்லினால் செய்யப்பட்ட ஆஞ்சநேயர் சிலை இங்குதான் அமைந்துள்ளது. இந்த ஆஞ்சநேயர் கோவிலுக்கு வருபவர்கள் தரிசிப்பதற்கு நபர் ஒருவருக்கு ரூ.20 தரிசன கட்டணமாக வசூலிக்கப்பட்டு வருகிறது. பலர் குடும்பத்தோடு வரும்போது தரிசனத்திற்காக பெரும் தொகையை கட்டணமாக செலுத்த வேண்டிய நிலை உள்ளதால் தரிசன கட்டண முறையை நீக்கும்படி பலரும் கோரிக்கை விடுத்து வந்தனர். இனி ஆஞ்சநேயர் கோவிலில் தரிசன கட்டணம் முறை நிறுத்தப்படுவதாகவும், இனி பக்தர்கள் இலவசமாகவே தரிசனம் செய்யலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இது அப்பகுதி மக்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.