நாளை மெரீனா செல்ல மக்களுக்கு தடை?

Filed under: அரசியல்,சென்னை |

பொதுமக்கள் நாளை சென்னை மெரினாவுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளதாக வெளிவந்திருக்கும் செய்தி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நாளை பிரதமர் மோடி நாளை தமிழகம் வந்து சென்னை கோவை வந்தே பாரத் ரயிலை தொடங்கி வைத்துவிட்டு அவர் முதுமலை செல்லவுள்ளார். நாளை பிரதமர் வருகையையொட்டி ஐந்து அடுக்கு பாதுகாப்பு அமைக்கப்பட்டுள்ளது. அவரது நிகழ்ச்சிநிரலில் சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது. அவர் சென்னை மயிலாப்பூரில் உள்ள ராமகிருஷ்ணா மடத்திற்கு செல்லவிருப்பதாக அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், தற்போது அதற்கு பதிலாக அவர் சென்னை மெரினாவில் உள்ள விவேகானந்தர் இல்லத்திற்கு செல்லவுள்ளார். பிரதமர் மோடி வருகை காரணமாக சென்னை மெரினா கடற்கரைக்கு நாளை பொதுமக்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.