நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனின் தகவல்!

Filed under: அரசியல்,இந்தியா |

இந்தியாவில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் ஜிஎஸ்டி வரை முறை அமல்படுத்தப்பட்ட பின்னர் ஒவ்வொரு மாதமும் ஜிஎஸ்டி வசூல் அதிகரித்து வருகிறது.

குறிப்பாக கடந்த ஒன்பது மாதங்களாக இந்தியாவில் ஜிஎஸ்டி வசூல் 1.40 லட்சம் கோடிக்கு மேல் வசூல் ஆகி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்நிலையில் கடந்த நவம்பர் மாதத்தில் ரூ.1,45,867 லட்சம் கோடி ஜி.எஸ்.டி. வசூலாகியுள்ளதாக நிதியமைச்சகம் தகவல். இந்தவசூல் தொகை கடந்த ஆண்டு நவம்பரை விட 11% அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து 9 மாதங்களாக 1.40 லட்சம் கோடிக்கு மேல் ஜி.எஸ்.டி. வரி வருவாய் கிடைத்துள்ளதாக நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.