நிறைவான நலத்தையும், நித்தம் மலரும் எழுச்சியை வழங்கும் ஆண்டாக அமையும்

Filed under: சென்னை,தமிழகம் |
 
இந்திய தேசிய லீக் மாநிலபொதுச் செயலாளர் ஜூக்கிருத்தீன் அஹமது வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில்:
 
தமிழ்ப் புத்தாண்டு தினமானது, ஆண்டுதோறும் சித்திரைத் திங்கள் முதல் நாளன்று நமது மக்களிடையே அமைதி, வளம், மகிழ்ச்சியை உண்டாக்கும் வகையில் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நன்னாளில் தமிழக மக்கள் அனைவருக்கும் என்னுடைய இதய பூர்வமான நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். இப்புத்தாண்டு தமிழர்களின் உள்ளங்களில் நம்பிக்கை, நற்சிந்தனை, வெற்றி ஆகியவற்றை தழைத்தோங்கச் செய்யும் என நான் நம்புகிறேன்.
 
 
இயன்றதை செய்வோம், இல்லாதவற்கே என்ற கொள்கையோடு, தமிழகம் மட்டுமல்ல உலகெங்கும் உள்ள தமிழர்கள் சாதி, மதத்திற்கு அப்பாற்பட்டும், நாம் அனைவரும் தமிழர்கள் என்ற உணர்வோடும், இருப்பவர்கள் இல்லாதவர்கள் என்ற வேறுபாடின்றியும், அமைதியாகவும், ஆரோக்கியத்துடனும், எல்லா வளமும், எல்லா நலனும் பெற்று நாம் அனைவரும் வாழவேண்டும்.
 
தற்போது கொரோனா வைரஸ் தொற்றால் நாம் அனுபவித்து வரும் வேதனை அனைத்தும் கலைந்து, இந்த புத்தாண்டு தமிழக மக்களுக்கு ஏற்றமிகு வளர்ச்சியையும், என்றும் குறையாத மகிழ்ச்சியையும், நிறைவான நலத்தையும், நித்தம் மலரும் எழுச்சியையும் வழங்கும் ஆண்டாக விளங்கட்டும் என்று வாழ்த்தி, உலகெங்கிலும் வாழும் தமிழர்கள் அனைவருக்கும் மீண்டும் ஒரு முறை எனது உளமார்ந்த “தமிழ்ப் புத்தாண்டு” நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.