நீச்சல் குளத்தில் 72 லிட்டர் சிறுநீரா!

Filed under: தமிழகம் |

ஒரு ஆய்வில் பொதுநீச்சல் குளத்தில் சராசரியாக 72 லிட்டர் சிறுநீர் கலந்திருப்பதாக ஆய்வில் அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.

பெற்றோர்கள் சிறு குழந்தைகளை நீச்சல் பயிற்சிக்கு அனுப்புவதற்கு ஆர்வப்படுகின்றனர். இதனால் நீச்சல் பயிற்சி பள்ளிகள் பெரிய நகரங்களில் நல்ல வருமானம் உள்ள தொழிலாக உள்ளது. நீச்சல் குளங்களில் உள்ள பாதுகாப்பு அம்சங்கள் குறித்து சமீபத்தில் வழிகாட்டி நெறிமுறைகளை தமிழ்நாடு அரசு வெளியிட்டது. நீச்சல் குளங்களில் உள்ள தண்ணீரின் தரம் குறித்து ஆய்வு செய்யப்பட்டதில் பொது நீச்சல் குளத்திலுள்ள தண்ணீரில் சராசரியாக 72 லிட்டர் சிறுநீர் கலந்திருப்பதாக அதிர்ச்சி தகவல் கிடைத்துள்ளது. இத்தகவல் நீச்சல் குளத்திற்கு அனுப்பும் குழந்தைகளின் பெற்றோர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.