நீட் தேர்வை ரத்து செய்யக்கோரி உச்ச நீதிமன்றத்தில் மனு

Filed under: இந்தியா |

புதுடெல்லி, செப் 29:
நீட் தேர்வை ரத்து செய்யக்கோரி, உச்சநீதிமன்றத்தில் சில மாணவர்கள் சேர்ந்து மனு தாக்கல் செய்துள்ளனர்.

நாடு முழுதும், அரசு மற்றும் தனியார் மருத்துவ கல்லூரிகளில் மருத்துவ படிப்புகளில் சேர்வதற்காக, நீட் எனப்படும் தேசிய நுழைவுத் தேர்வு ஆண்டுதோறும் நடத்தப்பட்டு வருகிறது. இந்த தேர்வுக்கு, தமிழகத்தில், தொடக்கத்தில் இருந்தே எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டு வருகிறது.

இதற்கிடையே, கடந்த, செப்டம்பர் 12ஆம் தேதி, நாடு முழுவதும் நீட் தேர்வு நடைபெற்றது. இந்த தேர்வை ஆயிரக்கணக்கான மாணவர்கள் எழுதினர். அந்த தேர்வில் ஆள்மாறாட்டம், முன்கூட்டியே வினாத்தாள் வெளியானது உள்ளிட்ட பல்வேறு முறைகேடுகள் நடந்து உள்ளது கண்டுபிடிக்கப்பட்டது.

இந்நிலையில், முறைகேடுகள் நடந்த இந்த தேர்வை ரத்து செய்யக்கோரி, தேர்வு எழுதிய சில மாணவர்கள், உச்ச நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளனர். இந்த மனு விரைவில் விசாரணைக்கு வர உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.