நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் கருத்து!

Filed under: அரசியல்,தமிழகம் |

உயர் நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் அமைச்சர் பொன்முடி மீது வருமானத்திற்கு அதிகமான சொத்து சேர்த்ததாக தொடரப்பட்ட வழக்கில் மிக மோசமான விசாரணை செய்யப்பட்டுள்ளது என கருத்து தெரிவித்துள்ளார்.

சொத்துக் குவிப்பு வழக்கிலிருந்து அமைச்சர் பொன்முடி மற்றும் அவரது மனைவி விசாலாட்சி ஆகியோரை விடுவித்து வேலூர் மாவட்டம் முதன்மை நீதிமன்றம் தீர்ப்பளித்த நிலையில் இவ்வழக்கை தானாகவே முன்வந்து சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் ஏன் எடுத்துள்ளேன் என்பது குறித்து விளக்கமளித்துள்ளார். இவ்வழக்கில் மிக மோசமான முறையில் விசாரணை நடத்தப்பட்டுள்ளது என்றும் அதனால் தான் தானாகவே முன்வந்து விசாரணைக்கு எடுத்துள்ளேன் என்றும் அவர் தெரிவித்தார். மேலும் இதற்கான விளக்கத்தை 17 பக்கம் உத்தரவில் அவர் தெரிவித்துள்ளார். இவ்வழக்கு தொடர்பாக செப்டம்பர் 7ம் தேதிக்குள் பதில் அளிக்க லஞ்ச ஒழிப்புத்துறை, பொன்முடி மற்றும் அவரது மனைவி ஆகியோருக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.