தமிழ்நாட்டில் 131 காவலர்களுக்கு அண்ணா பதக்கம் – முதல்வர் பழனிசாமி அறிவிப்பு!

Filed under: தமிழகம் |

பேரறிஞர் அண்ணாவின் பிறந்தநாளை முன்னிட்டு சிறப்பாக வேலைபார்த்த காவல்துறை உள்பட சீருடைப் பணியாளர்கள் 131 பேருக்கு அண்ணா பதக்கங்கள் அளிக்க முதல்வர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.

காவல்துறையில் 100 பேர், தீயணைப்பு துறையில் 10 பேர், சிறைத்துறையில் 10 பேர், ஊர்க்காவல் படையில் 5 பேர், விரல் ரேகைப் பிரிவில் இரண்டு பேர், தடய அறிவியல் துறையில் இரண்டு பேர் என 131 பேருக்கு அண்ணா பதக்கங்கள் கொடுக்கப்படுகிறது.

அவர்களுக்கு வெண்கல பதக்கம் மற்றும் மானியத்தொகை கொடுக்கப்படும்.பின்பு தமிழக முதல்வரின் வீரதீர செயலுக்கான தீயணைப்புத்துறை பதக்கம் பாளையங்கோட்டை தீயணைப்பு நிலைய அதிகாரி உள்பட இரண்டு பேருக்கு கொடுக்கப்படுகிறது. மேலும், அவர்களுக்கு தலா ரூ.5 லட்சம் பண வெகுமதியும் கொடுக்கப்படுகிறது.