கார்த்திக் சிதம்பரம் சிவகங்கையில் உள்ள காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது பேசிய அவர், “தேர்தல் ஆணையம் நடுநிலையோடு செயல்படவில்லை, மக்கள் மீது முழு நம்பிக்கை வைத்தே இத்தேர்தலை எதிர்கொள்கிறோம். பாஜகவினர் எதிர்க்கட்சி வேட்பாளர்களை மிரட்டி வாபஸ் பெற வைப்பது ஜனநாயக படுகொலை. நெல்லை காங்கிரஸ் கட்சி மாவட்ட தலைவர் கொலை சம்பவத்தை சட்டம் ஒழுங்கு பிரச்சினையாக பார்க்க கூடாது, அது தனி நபர்கள் மீது உணர்ச்சிவசப்பட்டு நடைபெறும் குற்ற சம்பவம், இதனை அரசு தடுக்க முடியாது. நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி தென்னிந்தியாவில் அதிக இடங்களை பிடிக்கும், தமிழகத்தில் இந்திய கூட்டணி 40 இடங்களிலும் வெற்றி பெறும்” என்று தெரிவித்தார்.
Related posts:
வெற்றிலை பாக்கு வைத்து பொதுமக்களிடம் வாக்கு சேகரித்த வித்தியாசமான விவசாய சங்க வேட்பாளர்.
சிவகங்கையில் போலியோ சொட்டு மருந்து முகாம். தொடங்கி வைத்தார் நகராட்சி சேர்மன்.
நில மோசடி வழக்கு: நேரில் ஆஜராக வடிவேலுவுக்கு உத்தரவு
பேரறிவாளன் உள்ளிட்ட 7 தமிழர்களை விடுதலை செய்ய தமிழக அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும் - வேல்முருகன் எம் ...



