நுகர்வோர் ஆணையம் எஸ்பிஐ வங்கிக்கு அபராதம்

Filed under: இந்தியா |

நுகர்வோர் ஆணையம் எஸ்பிஐ வங்கிக்கு அபராதம் விதித்துள்ளது.

கர்நாடக மாநிலம் ஹலியாலில் கன்னட மொழியில் காசோலையில் எழுதப்பட்ட காரணத்தினால் காசோலையை எஸ்பிஐ வங்கி நிராகரித்தது. அந்த வாடிக்கையாளருக்கு ரூபாய் 177 அபராதம் விதித்து எஸ்பிஐ வங்கி உத்தரவிட்டது. இதுகுறித்து அந்த எஸ்பிஐ வங்கி வாடிக்கையாளர் மாவட்ட நுகர்வோர் உரிமை ஆணையத்திடம் மனு கொடுத்துள்ளார். இதுபற்றி விசாரணை கடந்த சில மாதங்களாக நடைபெற்று வந்தது. இந்நிலையில் விசாரணையின் முடிவில் கன்னட மொழியில் எழுதப்பட்ட காசோலையை நிராகரித்ததற்காக எஸ்பிஐ வங்கிக்கு ரூ.85,177 அபராதம் விதித்து உத்தரவிட்டுள்ளது. எஸ்பிஐ வங்கி விதித்த அபராதத் தொகை விட 85 ஆயிரம் ரூபாய் அதிகமாக நுகர்வோர் ஆணையம் அபராதம் விதித்துள்ளது.