நெட்பிளிக்ஸ் ஓடிடி தளம் கடந்த 100 நாட்களில் 2 லட்சம் வாடிக்கையாளர்கள் இழந்துள்ளது.
நெட்பிளிக்ஸ் ஜனவரி மாதத்திலிருந்து மார்ச் வரையிலான காலகட்டத்தில் சந்தாரர்களின் எண்ணிக்கை 2 லட்சம் அளவில் குறைந்துள்ளது.
அதிக அளவில் இந்தியாவில் மக்களிடையே உபயோகத்தில் இருக்கும் ஓடிடியாக நெட்பிளிக்ஸ் இருந்து வருகிறது. பலதரப்பட்ட படங்கள், வெப்சிரிஸ், நிகழ்ச்சிகளை வழங்கும் நெட்பிளிக்ஸ் சில ஆண்டுகள் முன்னதாக வாடிக்கையாளர்களை ஈர்க்க தனது சப்ஸ்க்ரிப்ஷன் முறைகளில் மாற்றம் செய்தது.
நெட்பிளிக்ஸ் இந்த ஆண்டின் முதல் காலாண்டில் 221.6 மில்லியன் சந்தாதாரர்களுடன் உள்ள நிறுவனமாக உள்ளது. இது கடந்த ஆண்டின் கடைசி காலாண்டில் இருந்து சற்று குறைந்து அளவாகும். மேலும் காலாண்டு வருவாய் அறிக்கையின் படி, ஜனவரி மாதத்திலிருந்து மார்ச் மாதம் வரையிலான காலகட்டத்தில் நிறுவனத்தின் சந்தாதாரர்களின் எண்ணிக்கை 2 லட்சம் என்ற அளவில் குறைந்துள்ளது. இதனால் செவ்வாயன்று நெட்பிளிக்ஸ் பங்குகள் மதிப்பு 20% குறைந்தது.
உக்ரைன் மீது ரஷ்யா படையெடுத்துள்ள காரணத்தால் ரஷ்ய நாட்டில் தங்கள் நிறுவன சேவைகளை நிறுத்திக் கொண்டுள்ளது இதற்கு ஒரு காரணம் என நெட்ப்ளிக்ஸ் தெரிவித்துள்ளது. அத்துடன் ஏப்ரல் மாதத்திலிருந்து ஜூன் மாதம் வரையிலான காலாண்டில் மேலும் இரண்டு மில்லியன் சந்தாதாரர்களை அந்நிறுவனம் இழக்க வாய்ப்புள்ளதாகவும் எதிர்பார்க்கப்படுகிறது.