ஆப்கானிஸ்தான் நாட்டில் தீவிரவாதிகள் வெடிகுண்டு தாக்குதல்; உயிர் தப்பிய துணை அதிபர்!

Filed under: உலகம் |

ஆப்கானிஸ்தான் நாட்டில் சாலையோரம் நடத்த வெடிகுண்டு தாக்குதலில் அந்நாட்டு துணை அதிபர் அம்ருல்லா சலே சிறு காயங்களுடன் உயிர் தப்பினார்.

இதற்கு முன்பே முன்னாள் உளவுப்படை தலைவராக இருந்த போது பல தாக்குதலில் இருந்து தப்பித்து உள்ளார். இதில், கடந்த வருடம் நடத்த தாக்குதலும் அடங்கும்.

தற்போது அதிபர் சலேவின் காரை குறிவைத்து தீவிரவாதிகள் சாலையோரத்தில் வெடிகுண்டு தாக்குதலை நடித்தியுள்ளனர். இதில் 10 பேர் உயிரிழந்துள்ளனர் மற்றும் 15 பேர் காயம் அடைந்துள்ளனர்.

இந்த தாக்குதலுக்கு இந்தியா உள்பட பல நாடுகள் கடுமையான கண்டனத்தை தெரிவித்துள்ளது. இந்த தாக்குதலுக்கு எங்களுக்கு தொடர்பில்லை என தலிபான் அமைப்பு மறுத்துள்ளது.