நெல்சனின் எமோஷனல் ஆசை!

Filed under: சினிமா |

“பீஸ்ட்” திரைப்படத்தை தன் தந்தைக்கு காட்ட முடியாமல் போனது குறித்து டைரக்டர் நெல்சன் தனது வருத்தத்தை தெரிவித்துள்ளார்.


சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் அடுத்த திரைப்படமான தலைவர் 169 படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை சன் பிக்சர்ஸ் நிறுவனம் சற்றுமுன் வெளிவந்துள்ளது. ரஜினிகாந்த் நடிக்கும் இந்த திரைப்படத்தை நெல்சன் இயக்க உள்ளார். அனிருத் இசையமைக்க உள்ளார்.
“பீஸ்ட்” படத்தின் ரிலீஸ் வேலைகளில் பிஸியாக இருக்கும் நெல்சன் பீஸ்ட் படம் குறித்து அளித்துள்ள பேட்டியில், “எனது அப்பாதான் நான் சினிமாவுக்கு வர காரணம். “டாக்டர்” படம் ரிலீஸ் ஆவதற்கு முன்பாக அவர் இறந்துவிட்டார். “பீஸ்ட்” படத்தை அவர் பார்த்திருந்தால் மிகவும் சந்தோஷப்பட்டிருப்பார். அவருக்கு “பீஸ்ட்” படத்தைக் காட்ட முடியாமல் போனது மிகவும் வருத்தமாக உள்ளது’ என கூறினார்.