நேரில் சென்று இரங்கல் தெரிவித்த சூர்யா!

Filed under: சினிமா,தமிழகம் |

நாமக்கல் மாவட்ட ரசிகர் மன்ற செயலாளராக பணிபுரிந்தவர் ஜெகதீஷ். அவர் திடீரென உயிரிழந்ததை அடுத்து சூர்யா நேரில் சென்று இரங்கல் தெரிவித்துள்ளார்.

ஜெகதீஷின் மறைவு குறித்து தகவல் அறிந்த சூர்யா உடனடியாக நாமக்கல் சென்று அவரது வீட்டில் வைக்கப்பட்டிருந்த புகைப்படத்திற்கு அஞ்சலி செலுத்தினார். மேலும் அவரது மனைவி குழந்தைகளுக்கு ஆறுதல் கூறிய சூர்யா, உறவினர்களுக்கும் ஆறுதல் கூறினார்.