நேருக்கு நேர் பைக்குகள் மோதல்!

Filed under: தமிழகம் |

இரண்டு பைக்குகள் நேருக்கு நேர் மோதிக் கொண்டு விபத்துக்குள்ளான சிசிடிவி வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மயிலாடுதுறை மாவட்டம் காளகஸ்தி நாதம்புரம் பகுதியிலுள்ள பிரதான சாலையில், இரண்டு இரு சக்கர வாகனங்கள் இன்று வந்து கொண்டிருந்தன. அப்போது, இடம்புறம் வருவதற்குப் பதில், பைக்கை ஓட்டி வந்தவர் வலது புறம் வந்துள்ளார. எதிர்ப்புறம் வந்த மற்றொரு பைக் அந்த பைக்கின் மீது மோதியது. மோதிய வேகத்தில் இருவரும் தூக்கி வீசப்பட்டனர். அப்போது, வந்த காரில் எதிர்ப்புறம் வந்தவர் மோதி சிறிது தூரம் இழுத்துச் செல்லப்பட்டார். இந்த விபத்தில், இரு இளைஞர்களும் காயங்களுடன் தப்பினர். இச்சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பான சிசிடிவி காட்சிகள் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வைரலாகி வருகிறது.