நைஜீரியாவில் பதட்டம்.!

Filed under: உலகம் |

நைஜீரியாவில் ஆட்சியை ராணுவம் கைப்பற்றியுள்ளது. இதனால் அந்நாட்டு அதிபர் கைது செய்யப்பட்டுள்ளதோடு அரசியல் சாசனம் கலைக்கப்பட்டுள்ளது.

நைஜீரியா நாட்டில் முகமது பசோவ்ம் ஆட்சி செய்து கொண்டிருந்தார். திடீரென ராணுவம் ஆட்சியை கைப்பற்றி அதிபரையும் கைது செய்துள்ளது. அதுமட்டுமின்றி நைஜீரிய நாட்டின் அரசியல் சாசனம் கலைக்கப்பட்டுள்ளதாகவும் ராணுவ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும் நாடு முழுவதும் இரவு நேர ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாகவும் நைஜீரியா நாட்டிலுள்ள அரசு அலுவலகங்கள் அனைத்தும் மூடப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. மேலும் நைஜீரியா நாட்டின் அனைத்து எல்லைகளையும் மூட உத்தரவு பிறப்பித்துள்ளதாகவும் செய்திகள் வெளியாகி உள்ளது. இதனால் நைஜீரிய நாட்டில் என்ன நடக்கிறது என்பது வெளிஉலகுக்கு தெரியாமல் இருப்பதால் பெரும் பதட்ட நிலை ஏற்பட்டுள்ளது.