அமெரிக்காவில் நடக்கவிருக்கும் அதிபர் தேர்தலில் இடையூறு செய்ய சீனா திட்டம் – வெள்ளை மாளிகை குற்றச்சாட்டு!

Filed under: உலகம் |

அமெரிக்காவில் நடக்கவிருக்கும் அதிபர் தேர்தலில் இடையூறு சீனா திட்டமிட்டு வருவதாக வெள்ளை மாளிகையின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ராபர்ட் ஓ பிரையன் குற்றம் சாட்டியுள்ளார்.

அமெரிக்காவில் நவம்பர் 3 ஆம் தேதி அதிபர் தேர்தல் நடக்க உள்ளது. இதில் குடியரசு கட்சி சார்பில் அதிபர் டொனால்டு மீண்டும் போட்டியிடுகிறார். ஜனநாயக கட்சியின் சார்பில் ஜோ பிடன் அதிபர் வேட்பாளராகவும் மற்றும் துணை அதிபர் வேட்பாளராக இந்திய வம்சாவளியை சேர்ந்த கமலா ஹாரிஸும் போட்டியிடுகிறார்கள். இரு கட்சினரும் தீவிரமாக பிரச்சாரம் செய்து வருகின்றனர்.

இந்நிலையில் இந்த தேர்தலை சீர்குலைப்பதற்கு சீனா, ரஷ்யா, ஈரான் ஆகிய மூன்று நாடுகளும் செய்யப்பட்டு வருவதாக புலனாய்வு குழுவின் செய்தியை வைத்து வெள்ளை மாளிகையின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ராபர்ட் ஓ பிரையன் தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவில் அரசியலில் பாதிப்பு உருவாக்க சீனா இணையவழி நடவடிக்கையை செய்து வருவதாக குற்றச்சாட்டினார். இதை முறியடிக்க வலுவான நடவடிக்கைகளை அமெரிக்கா எடுத்துவருவதாக ராபர்ட் ஓ பிரையன் தெரிவித்துள்ளார்.