பங்குச்சந்தை உயர்வு!

Filed under: உலகம் |

பங்குச்சந்தை சென்செக்ஸ் உயர்ந்துள்ளதால் முதலீட்டார்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

கடந்த வாரம் முழுவதும் பங்குசந்தை ஏற்ற இறக்கத்துடன் இருந்தது. ஆனால், இன்று வாரத்தின் முதல் நாளிலேயே பங்குச்சந்தை உயர்ந்துள்ளதால் முதலீட்டாளர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். சற்றுமுன் பங்குச் சந்தை வர்த்தகம் தொடங்கிய நிலையில் மும்பை பங்குச் சந்தையின் சென்செக்ஸ் 400 புள்ளிகள் அதிகரித்து உள்ளது. 54 ஆயிரத்து 175 என்ற புள்ளிகளில் தற்போது வர்த்தகமாகி வருகிறது. அதேபோல் தேசிய பங்குச் சந்தையான நிப்டி 125 புள்ளிகள் அதிகரித்து 16175 என வர்த்தகமாகி வருகிறது. வாரத்தின் முதல் நாளிலேயே பங்குச்சந்தை அதிகரித்து நல்ல குறியீடாக பார்க்கப்படுகிறது.