பங்குச்சந்தை குறித்து பிரச்சாரத்தில் அமித்ஷா பேச்சு

Filed under: அரசியல்,இந்தியா |

உள்துறை அமைச்சர் அமித்ஷா இப்போதே பங்குகளை வாங்கி கொள்ளுங்கள் ஜூன் 4-க்குப் பிறகு வாங்க முடியாது என்று தேர்தல் பிரச்சாரத்தில் கூறியுள்ளார்.

கடந்த சில நாட்களாக பங்குச்சந்தை ஏற்ற இறக்கத்துடன் இருந்து வருகிறது. தேர்தல் முடிவில் பாஜக மீண்டும் ஆட்சியமைத்தால் பங்குச்சந்தை மிகப்பெரிய அளவில் உயரும் என்று கூறப்படுகிறது. ஆனால் கடந்த சில நாட்களாக பங்குச்சந்தை சரிந்து வருவதால் பாஜக தோல்வியடைய வாய்ப்பிருப்பதாகவும் ஒரு வதந்தி பரவி வருகிறது. மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா நேற்று தேர்தல் பிரச்சாரத்தில், “பாஜகவின் மோசமான செயல்திறன் காரணமாக பங்குச்சந்தை வீழ்ச்சியை சந்தித்து வருவதாக கூறப்படுவது தவறான தகவல். ஜூன் 4ம் தேதிக்கு பிறகு பங்குச்சந்தை கணிசமான ஏற்றத்தை சந்திக்கும். எனவே இப்போதே பங்குச்சந்தை இறங்கும்போது பங்குகளை வாங்கி வைத்துக் கொள்ளுங்கள். ஜூன் 4-ம் தேதி பங்குகளை அதிக விலைக்கு வாங்க வேண்டிய நிலை ஏற்படும். பங்குகளை சரியான விலைக்கு வாங்க இதுதான் சரியான தருணம்” என்று அவர் கூறியுள்ளார்.