பட்டாசு வெடிவிபத்தானவர்களுக்கு நிவாரணம்!

Filed under: தமிழகம் |

சிவகாசியில் கடந்த சில நாட்களுக்கு முன் பட்டாசு ஆலை வெடி விபத்தில் பலியானவர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நிவாரண உதவி வழங்குவதாக அறிவித்துள்ளார்.

 

சிவகாசியில் பட்டாசு ஆலை வெடி விபத்தில் அரவிந்த் என்பவர் உயிரிழந்தார். அவரது மரணத்திற்கு இரங்கல் தெரிவித்த முதலமைச்சர், அவர்கள் குடும்பத்திற்கு ரூபாய் 3 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார். மேலும் வெடிவிபத்தில் அரவிந்த் உயிரிழந்தார் என்ற துயரச் செய்தியைக் கேட்டு தான் வேதனை அடைந்ததாகவும், இனிமேல் பட்டாசு ஆலையில் வெடி விபத்து ஏற்படாத வண்ணம் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.