பணி நேரத்தில் இல்லாத அரசாங்க அதிகாரியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சஸ்பெண்ட் செய்துள்ளார்.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திடீரென ஆய்வில் ஈடுபட்டு பணியில் இல்லாத அரசாங்க ஊழியரை சஸ்பெண்ட் செய்துள்ளார். இத்தகவல் தற்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சமீபத்தில் முதலமைச்சர் பல்வேறு பகுதிகளுக்கும் சென்று ஆய்வு செய்து வருகிறார். அவ்வகையில் ராணிப்பேட்டை கூட்ரோட்டில் உள்ள குழந்தைகள் நல மையத்தில் முதலமைச்சர் திடீரென ஆய்வு செய்தார். அப்போது அக்குழந்தைகள் நல மையத்தில் உள்ள அதிகாரி பணியில் இல்லாததால் உடனடியாக அவரை சஸ்பெண்ட் செய்ய உத்தரவிட்டார். அர்ஜுன் நடித்த “முதல்வன்” படத்தில் வரும் முதல்வர் கேரக்டர் போலவே முதலமைச்சர் செயல் இருப்பதாக நெட்டிசன்கள் தங்கள் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.