கனமழை காரணமாக திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி மற்றும் தென்காசி உள்ளிட்ட ஏழு மாவட்டங்களுக்கு இன்றும் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் விடுமுறை அளிக்கப்பட்டது.

இதைத்தொடர்ந்து நாளையும் நெல்லை மாவட்டத்தில் பள்ளி கல்லூரிகள் விடுமுறை என மாவட்ட ஆட்சித் தலைவர் அறிவித்துள்ளார். வானிலை ஆய்வு மையம் குமரி கடல் மற்றும் அதை ஒட்டிய பகுதிகளில் வளிமண்டல சுழற்சி நிலவுவதால் நெல்லை மாவட்டத்தில் நாளை கனமழை பெய்யும் என்று தெரிவித்துள்ளது. இதையடுத்து நெல்லை மாவட்டத்தில் நாளை பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ஒரு சில தென் மாவட்டங்களில் நாளை பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்க வாய்ப்பிருப்பதாகவும் இன்னும் ஒரு சில மணி நேரத்தில் இது குறித்த தகவல் வெளியாகும் என்று கூறப்படுகிறது.
Related posts:
ஸ்ரீபெரும்புதூர் அதிமுக எம்எல்ஏ பழனிக்கு கொரோனா வைரஸ் உறுதி!
உள்நாட்டிலேயே கட்டமைக்கப்பட்ட ‘விக்ரஹா’ அதி நவீன ரோந்துக் கப்பலை நாட்டுக்கு அர்ப்பணித்தார் ராஜ்நாத் ...
மேட்டூர் அருகே வனப்பகுதியில் காயங்களுடன் ஆண் சடலம்: கர்நாடக சோதனைச் சாவடி எரிப்பு; எல்லையில் பதற்றம்
திருமணமாகாத பெண்ணிற்கு கருக்கலைப்பு முயற்சி மருத்துவமனையை முற்றுகையிட்ட உறவினர்கள்!!



