பணி நீக்கம் செய்ய கோடிக்கணக்கில் செலவிட்ட மெட்டா!

Filed under: இந்தியா,உலகம்,தமிழகம் |

பணி நீக்க நடவடிக்கைக்கு மெட்டா நிறுவனம் ரூ.8 ஆயிரம் கோடி செலவு செய்துள்ளதாக தகவல் வெளியாகிறது.

சமீபத்தில் பேஸ்புக்கின் தாய் நிறுவனமான மெட்டா தங்கள் நிறுவனத்தில் பணியாற்றும் ஊழியர்களில் 13 சதவீதம் பேரை பணி நீக்கம் செய்ய திட்டமிட்டது. அந்நிறுவத்தின் பொருளாதார சரிவை ஈடுகட்டுவதற்கும், நிறுவன மறுகூட்டமைப்பு மேற்கொள்வதற்கும் இந்த நடவடிக்கை எடுக்ககப்பட்டதாக நிறுவனம் தரப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே, மெட்டா நிறுவனம் 21 ஆயிரம் ஊழியர்களை பணிநீக்கம் செய்யவுள்ளதாகக் கூறப்பட்டது. மெட்டா நிறுவனம் 2023 காலாண்டு முடிவுகளை பத்திரங்கள் மற்றும் பரிமாற்ற அறிக்கையில் சமர்ப்பிக்கப்பட்டு உள்ளது. இதில், பணி நீக்க நடவடிக்கைக்காக, அதாவது ஊழியர்களுக்காக பணி நீக்க ஊதியம் மற்றும் தனிப்பட்ட செலவினங்களுக்கு மட்டும் 1 பில்லியன் டாலர்கள் அதாவது இந்திய மதிப்பில் ரூ.8 ஆயிரம் கோடி செலவாகும் என்று அதில் குறிப்பிடப்பட்டடுள்ளது.