‘பத்து தல’ ரிலீஸ் தேதி அறிவிப்பு!

Filed under: சினிமா |

“பத்து தல” திரைப்படத்தின் ரிலீஸ் தேதி பற்றிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது படக்குழு.

சமீபத்தில் சிம்பு நடிப்பில் “மஹா” மற்றும் “வெந்து தணிந்தது காடு” ஆகிய திரைப்படங்களின் ரிலீஸ் தேதிகள் அறிவிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து தற்போது உருவாகி வரும் மற்றொரு திரைப்படமான ‘பத்து தல’ படத்தின் ரிலீஸ் தேதி அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கிருஷ்ணா என்பவரின் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ‘பத்து தல.’ இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைறுகிறது. அடுத்தகட்ட படப்பிடிப்பு சிம்பு அமெரிக்காவிலிருந்து திரும்பியவுடன் நடைபெறும்.
சிம்பு, கவுதம் கார்த்திக், பிரியா பவானி சங்கர் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். ‘பத்து தல’ திரைப்படம் வரும் டிசம்பர் 14ம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகும் என படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். இவ்வாண்டு ’மஹா’, ‘வெந்து தணிந்தது காடு’ மற்றும் ‘பத்து தல’ ஆகிய மூன்று சிம்புவின் திரைப்படங்கள் ரிலீசாக உள்ளன. எஸ்டிஆரின் ரசிகர்களுக்கு விருந்தாக தொடர்ந்து மூன்று திரைப்படங்கள் வரப்போகிறது.