பத்மாவதி தாயார் கோவிலில் மக்கள் கூட்டம்!

Filed under: சென்னை |

சமீபத்தில் சென்னையில் தியாகராய நகரில் பத்மாவதி தாயார் கோவில் கட்டப்பட்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது. தற்போது இக்கோவிலுக்கு பக்தர்களின் வருகை அதிகரித்துள்ளது.

கும்பாபிஷேகத்தில் கலந்து கொள்ள முடியாதவர்கள் 41 நாட்கள் மண்டல பூஜையில் கலந்து கொண்டு பத்மாவதி தாயாரை தரிசனம் செய்து வருகின்றனர். நாளுக்கு நாள் இந்த கோவிலுக்கு வரும் பக்தர்கள் கூட்டம் அதிகமாகிக் கொண்டிருக்கிறது. இதையடுத்து பாதுகாப்பு ஏற்பாடுகளும் பலப்படுத்தப்பட்டுள்ளன. தினமும் காலை 7.30 மணி முதல் இரவு 9 மணி வரை சாமி தரிசனம் செய்ய பக்தர்கள் அனுமதிக்கப்படுகின்றனர். தரிசனத்திற்கு வரும் பக்தர்களுக்கு சிறப்பான ஏற்பாடுகளை தேவஸ்தான குழு செய்துள்ளது.