பள்ளிகள் திறப்பில் மாற்றம் இருக்குமா?

Filed under: தமிழகம் |

பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பள்ளிகள் வெயிலின் தாக்கம் குறையாததால் ஜூன் 7ம் தேதி அதாவது வரும் புதன்கிழமை திறக்கப்படும் என தெரிவித்திருந்தார்.

ஆனால் மே மாதம் போலவே ஜூன் மாதமும் கடுமையான வெயில் அடித்து வருவதால், பள்ளிகள் திறப்பதை மேலும் ஒரு வாரத்திற்கு ஒத்தி வைக்க வேண்டும் என மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் சார்பில் வேண்டுகோள் விடுக்கப்பட்டது. எனவே பள்ளிகள் மேலும் ஒரு வாரம் திறப்பது ஒத்திவைக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது குறித்து பள்ளி கல்வித்துறை அதிகாரிகள் கூறிய போது மேலும் ஒரு வாரம் பள்ளி திறப்பது ஒத்திவைக்கப்படுவது குறித்த எந்த முடிவையும் இப்போதைக்கு கல்வித்துறை சார்பில் எடுக்கப்படவில்லை என்றும் கல்வித்துறை அதிகாரிகளிடம் அமைச்சர் ஆலோசனை நடத்தி அதன் பிறகு முதலமைச்சரிடம் கலந்து ஆலோசித்த பின்னர் தான் பள்ளிகள் திறப்பது தாமதம் குறித்து அறிவிப்பு வெளியிடப்படும் என்றும் தெரிவித்தார். அதன்படி ஆலோசனைக்கு பின் 1ம் வகுப்பு முதல் 5ம் வகுப்பு வரை ஜூன் 14ம் தேதியும், 6ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை 12ம் தேதியும் பள்ளிகள் திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.