பள்ளிக் கல்வித்துறையின் உத்தரவு!

Filed under: தமிழகம் |

பள்ளிக்கல்வித்துறை சமீபத்தில் தமிழகத்தில் பகுதிநேர ஆசிரியர்களின் ஓய்வு வயது 60 என அறிவித்திருந்தது. அந்த அறிவிப்பு தற்போது அமலுக்கு வந்துள்ளது.

பகுதிநேர ஆசிரியர்களின் ஓய்வு வயது 60 ஆக நீடிக்க வேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட்டு வந்தது. இந்த கோரிக்கை குறித்து பரிசீலனை செய்த பள்ளி கல்வித்துறை பகுதிநேர ஆசிரியர்கள் 60 வயதில் ஓய்வு பெறுவார்கள் என சமீபத்தில் அறிவித்தது. அரசு ஊழியர்கள் ஓய்வு வயது 60 ஆக நிர்ணயிக்கப்பட்டு நிலையில் பகுதிநேர ஆசிரியர்களின் ஓய்வு வயது 60 ஆக நியமிக்கப்படுவதாக பள்ளிக்கல்வித்துறை அறிவித்திருந்தது. இதுவரை பகுதி நேர ஓய்வு பகுதிநேர ஆசிரியர்களின் ஓய்வு வயது 58 ஆக இருந்த நிலையில் தற்போது பகுதி நேர ஆசிரியர்களின் ஓய்வு வயது 60 என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.